‘சூப்பர் சுவையில் ரிலாக்ஸ் டைமில் தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து பரிமாறுவது சாத்தியம்தானா?’ என்று யோசிப்பவர்களுக்கு உதவி புரியும் இந்த கிரீன்பீஸ் சாட்.
**எப்படிச் செய்வது?**
ஒரு கப் பச்சைப் பட்டாணியை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் (காய்ந்த பட்டாணி என்றால் அதை நான்கு மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் நான்கு விசில் வரும்வரை வேகவைக்கவும்). பின்னர் வேகவைத்த பட்டாணியுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் கால் கப், பொடியாக நறுக்கிய தக்காளி கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு ஒரு டேபிள்ஸ்பூன், சாட் மசாலாத்தூள் 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன் உப்பு ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிறிதளவு மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
**சிறப்பு**
பச்சைப்பட்டாணியில் குறைவான கலோரியும், அதிக அளவு நார்ச்சத்தும், புரதமும் உள்ளது. இந்த நார்ச்சத்தும், புரதமும் நமக்கு வயிறு நிறைந்த திருப்தியைக் கொடுப்பதால் இவை பசியைப் போக்கவும், உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவுகிறது.�,