தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 17) ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,870. வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 20 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,43,945 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 54, 122 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 5,667 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை பூரண நலம் பெற்றவர்களின் எண்ணிக்கை 2,83, 937 ஆக அதிகரித்துள்ளது. இன்று 67,532 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 37,78,778 மாதிரிகளுக்கு இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் 84, தனியார் மருத்துவமனைகளில் 36 பேர் என இன்று ஒரே நாளில் 120 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 5,886 ஆக உயர்ந்துள்ளது. அரசு ஆய்வகங்கள் 62, தனியார் ஆய்வகங்கள் 74 என மொத்தம் 136 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.
சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 1,000 பேருக்கு குறைவாக பாதிப்பு பதிவான நிலையில், இன்று 1,185 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது. இதேபோல கோவை மாவட்டத்தில் 393, கடலூர் 390, திருவள்ளூர் 308, தேனி 279, சேலம் 268, செங்கல்பட்டு 224, விருதுநகர், 212, கன்னியாகுமரியில் 209 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல காஞ்சிபுரத்தில் 174, புதுக்கோட்டை 164, திண்டுக்கல் 154, ராணிப்பேட்டை 151, தென்காசி 147, விழுப்புரம் 138, ஈரோடு 137, மதுரையில் 136 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இரண்டு இலக்கங்களில் பதிவாகியுள்ளது.
**எழில்**
�,