fரிலாக்ஸ் டைம்: தேங்காய் வெல்ல உருண்டை!

Published On:

| By Balaji

மூன்று வேளையும் ஒரே மாதிரியான உணவு வகைகளை உட்கொள்வது முழுமையான ஆரோக்கியம் தராது. ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகள் உடல் வளர்ச்சிக்கும் திறன் மேம்பாடுகளுக்கும் கைக்கொடுக்கும். அதிகளவில் மாவுச்சத்து, சர்க்கரை சேர்ந்த ஸ்நாக்ஸையும் தவிர்க்க வேண்டும். அதற்கு இந்தத் தேங்காய் வெல்ல உருண்டை செய்து சாப்பிடலாம்.

**எப்படிச் செய்வது?**

பாத்திரத்தில் பொடித்த வெல்லம் கால் கப் சேர்த்து, அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் கரைய விடவும். பிறகு வடிகட்டி மீண்டும் கரைசலை அடுப்பிலேற்றி உருட்டுப் பதம் வரும் வரை காய்ச்சவும். அதனுடன் ஒரு கப் தேங்காய்த் துருவல், இரண்டு சிட்டிகை ஏலக்காய்த்தூள் சேர்த்து, சிறு தீயில்வைத்துக் கிளறவும். கலவை கெட்டியாகிப் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது, ஒரு கப் அரிசி மாவு சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் கையில் சிறிதளவு நெய் தடவிக்கொண்டு சிறிய உருண்டைகளாக உருட்டிவைத்து ரிலாக்ஸ் டைமில் சாப்பிடவும்.

**சிறப்பு**

இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் ஆகியவை அடங்கியுள்ளன. இது உடலை நாள் முழுக்கப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share