wகிச்சன் கீர்த்தனா: குடமிளகாய் பருப்பு உசிலி

Published On:

| By Balaji

காய்கறிகளிலேயே அதிக அளவு வைட்டமின் சி உள்ளது குடமிளகாயில்தான். இவை தவிர கால்சியம், இரும்பு, பொட்டாசியம்,சோடியம், மக்னீஷியம் போன்ற தனிம சத்துகளும் வைட்டமின் இ, வைட்டமின் ஏ, வைட்டமின் பி காம்பளக்ஸ் போன்ற வைட்டமின் சத்துகளும் கொண்ட இந்த குடமிளகாய் பருப்பு உசிலியை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

**என்ன தேவை?**

குடமிளகாய் – கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் கப், காய்ந்த மிளகாய் – 5 (மூன்றையும் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்)

கடுகு – ஒரு டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

**எப்படிச் செய்வது?**

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து, அரைத்த மிளகாய் விழுதைப் போட்டுக் கிளறவும். 15 நிமிடம் கிளறியதும், நறுக்கிய குடமிளகாய், உப்பு சேர்த்து மேலும் நன்றாக கிளறி இறக்கவும். சாப்பாட்டுடன் தொட்டுக் கொள்ள ஏற்ற உசிலி இது.

**[நேற்றைய ரெசிப்பி: சீஸ் ஸ்டஃப்டு குடமிளகாய்](https://minnambalam.com/health/2021/02/15/1/cheese-stuffed-capsicum)**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share