qகிச்சன் கீர்த்தனா: குடமிளகாய் பனீர் ஃப்ரை

Published On:

| By Balaji

குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். மேலும் குடமிளகாய் வயது முதிர்வைத் தடுக்கும் ஆற்றலும் கொண்டது. சுவையும் மணமும் நிறைந்த இந்த குடமிளகாய் பனீர் ஃப்ரை அனைவருக்கும் ஏற்றது.

**என்ன தேவை?**

பனீர் – 2 கப்

குடமிளகாய் – 1 (நீளவாக்கில் நறுக்கவும்)

வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கவும்)

சோயா சாஸ் – சிறிதளவு

பூண்டு, பச்சைமிளகாய் சாஸ் – தலா அரை டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

பனீரை துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும். அதே எண்ணெயில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு குடமிளகாய் துண்டுகளைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். சோயா சாஸ், பூண்டு – மிளகாய் சாஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். கடைசியில் பனீர் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.

**[நேற்றைய ரெசிப்பி: குடமிளகாய் பருப்பு உசிலி](https://minnambalam.com/health/2021/02/16/1/capsicum-with-dal)**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share