uரிலாக்ஸ் டைம்: வாழைப்பழம் வால்நட் ஸ்மூத்தி!

Published On:

| By Balaji

‘தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டாம்’ என்று சொல்வதுபோல் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் கர்ப்பிணிப் பெண்கள் அனீமியா போன்ற இரும்புச்சத்து குறைபாடு கொண்ட நோய்களைத் தடுக்கலாம் என்பதும் உண்மை. ரிலாக்ஸ் டைமில் இந்த வாழைப்பழம் வால்நட் ஸ்மூத்தி செய்து அருந்துங்கள். புத்துணர்ச்சி பெறுங்கள்.

**எப்படிச் செய்வது?**

நன்கு பழுத்த இரண்டு வாழைப்பழத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன், அரை கப் புளிக்காத கெட்டித் தயிர், 5 முதல் 8 வரை வால்நட், ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்தெடுக்கவும். பிறகு இதைக் கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஜில்லென்று பருகவும்.

**சிறப்பு**

வால்நட்டில் உள்ள ஒமேகா இதயத்துக்கு வலிமை தரும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும். மார்பகப் புற்றுநோயைத் தடுக்க உதவும். தயிரில் உள்ள டயோசின் என்ற பொருள் மூளையில் உள்ள செரடோனின் அதிகரிக்க உதவும். மேலும், இதில் உள்ள புரோட்டீன் மூளையில் உள்ள நியூரோ ஹார்மோன்களை அதிகரித்து மன அழுத்தம் தரும் நரம்பை அமைதிப்படுத்த உதவுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share