கஞ்சி, உயிர் காக்கும் ஆகாரம் மட்டுமல்ல; ஆரோக்கியத்தின் ஆதாரம் என்பதே மருத்துவம் உணர்த்தும் உண்மை. எளிமையான செய்முறை; எளிதாக செரிமானம் ஆகக்கூடியது; ஆரோக்கியமானது; நம் உடலுக்கு பலம் தருவது.
**எப்படிச் செய்வது?**
கால் கப் பச்சைப்பயற்றை வறுத்து அரை மணிநேரம் ஊறவைத்துக்கொள்ளவும். ஒரு கப் புழுங்கல் அரிசி, ஊறவைத்த பச்சைப்பயறு, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், தேவையான உப்புடன் மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைக்கவும். இத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய் இரண்டு, பூண்டு பற்கள் மூன்று, கால் டீஸ்பூன் சீரகம், தோலுரித்த ஆறு முதல் எட்டு சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து குக்கரில் சேர்க்கவும். குக்கரை நான்கு விசில்விட்டு இறக்கிப் பரிமாறவும்.
**சிறப்பு**
பச்சைப்பயறு நமது பாரம்பர்ய தானியம். இதில் வைட்டமின், கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. அதோடு மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு அளிக்கும்.�,