மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 17 ஜன 2021

ரிலாக்ஸ் டைம்: பீட்ரூட் ரெய்த்தா!

ரிலாக்ஸ் டைம்: பீட்ரூட் ரெய்த்தா!

பீட்ரூட்டின் நிறத்தைப் பார்த்து, குழந்தைகள் அதைச் சாப்பிடாமல் ஒதுக்கிவைப்பார்கள். இதற்கு, பெரியவர்களும் விதிவிலக்கல்ல. ஆனால், தவிர்க்கவே கூடாத கிழங்கு வகைகளில் முக்கியமானது பீட்ரூட். வைட்டமின், நல்ல கொழுப்பு உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் இதில் நிறைந்திருக்கின்றன. இதை சமைக்கும்போது சில சத்துகள் அழிய வாய்ப்பு உண்டு என்பதால் பீட்ரூட்டின் முழுச்சத்துகளையும் பெற, ‘பீட்ரூட் ரெய்த்தா’ சிறந்தது.

எப்படிச் செய்வது?

200 கிராம் துருவிய பீட்ரூட்டுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாயைச் சேருங்கள். அதனுடன் சிறிதளவு மல்லித்தழை, கறிவேப்பிலை, மிளகுத்தூள், 100 கிராம் தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறினால் பீட்ரூட் ரெய்த்தா ரெடி. கூடுதல் சுவை வேண்டுமென்றால் கடாயில் ஒரு டீஸ்பூன் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் அரை டீஸ்பூன் கடுகு, விருப்பப்பட்டால் துருவிய இஞ்சி சிறிதளவு சேர்த்துத் தாளித்து ரெய்த்தாவுடன் சேர்க்கலாம்.

சிறப்பு

பீட்ரூட்டில் அதிகமிருக்கும் பொட்டாசியம் சத்து தசைகள், நரம்புகளை உறுதிப்படுத்தும். ரத்த ஓட்டம் சீராகும். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு பீட்ரூட் மிகவும் நல்லது. பீட்ரூட்டில் மக்னீசியம் சத்து நிறைந்திருப்பதால் எலும்பு, கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் சீராகும். பீட்ரூட்டிலுள்ள ஃபோலேட் (Folate) சத்து, கர்ப்பிணிகளின் கர்ப்பப்பைச் சுவர் ஆரோக்கியத்தைக் காக்கும். அடிக்கடி சளித் தொந்தரவு, சுவாசப் பிரச்னை, பல் ஈறு பாதிப்பு, மூலநோய், உள்ளுறுப்புகளில் ரத்தக்கசிவு இருப்பவர்களுக்கு பீட்ரூட் சிறந்த மருந்து. பீட்ரூட்டிலுள்ள பீட்டெயின் (Betaine) சத்து, மன அமைதிக்கு உதவும். கெட்ட கொழுப்பு மிகக் குறைவாக இருப்பதால், இதய நோயாளிகளும்கூட தங்களது உணவுப் பட்டியலில் பீட்ரூட் ரெய்த்தாவைச் சேர்த்துக்கொள்ளலாம்.

புதன், 13 ஜன 2021

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon