?ரிலாக்ஸ் டைம்: கார அவல் !

health

நம் உடலுக்குத் தேவையான வெப்ப சக்தி, அதாவது கலோரி மற்றும் இயக்க சக்தி (எனர்ஜி) பெறுவது மட்டுமே உணவின் பயனல்ல. அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்பட வேண்டும், அழிந்த திசு மூலக் கூறுகள் வெளியேற்றப்பட மற்றும் பிராண சக்தி உயர்த்தப்பட வேண்டும். உணவின் எஞ்சிய கழிவுகளும் நீக்கப்பட வேண்டும். இதையெல்லாம் உணவுகள்தான் செய்ய வேண்டும். அதற்கு, ஆரோக்கியத்தைத் தரக்கூடிய இயற்கை உணவுகள்தான் சிறந்த தேர்வு. இத்தகைய உணவுகளில் இந்த கார அவல் என்பது மிகப்பெரிய பங்கு வகிக்கும்.

**எப்படிச் செய்வது?**

மூன்று அல்லது நான்கு பேருக்கு கால் கிலோ அவலை கல் நீக்கி நன்றாக சுத்தம் செய்து நீரில் அலசவும். பிறகு, போதுமான அளவு நீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஊறிய அவலுடன் இரண்டு கப் தேங்காய்த் துருவல், தேவையான அளவு நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை, புதினா போன்றவற்றைச் சேர்க்கவும். இதனோடு, ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு, தேவைக்கேற்ப மிளகுத்தூள், சீரகத்தூள், சிறிதளவு இந்துப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும். கார அவல் சாப்பிடத் தயார்.

**சிறப்பு**

இதை காலை உணவுக்குப் பதிலாகவும் எடுத்துக் கொள்ளலாம். மலச்சிக்கல் நீங்கும், பசிப்பிணி தீரும், உடல் சதை குறையும், உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *