மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

ரிலாக்ஸ் டைம்: பூண்டு மஷ்ரூம் சூப்

ரிலாக்ஸ் டைம்: பூண்டு மஷ்ரூம் சூப்

உணவைச் சுவையாகச் சமைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவத்தைச் சத்துகளுக்கும் கொடுக்க வேண்டும். குறிப்பாக, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த நோயும் அவ்வளவு எளிதில் நம்மை அண்டாது. அதற்கு இந்த பூண்டு மஷ்ரூம் சூப் பெஸ்ட் சாய்ஸ்.

எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய்விட்டு அதில் நறுக்கிய பூண்டுப் பற்கள் ஏழு, நறுக்கிய வெங்காயம் ஒன்று, நறுக்கிய காளான் 200 கிராம் சேர்த்து மூன்று நிமிடங்கள் வதக்கவும். பின்னர் இதனுடன் தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு இக்கலவையில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து, கலவையை மிதமான தீயில் 10 நிமிடங்கள் மூடிவைத்துக் கொதிக்கவிட்டு பிறகு இறக்கவும். காளான் குளிர்ந்த பின்பு இந்தக் கலவை அனைத்தையும் மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து இந்த அரைத்த காளான் விழுதைச் சேர்க்கவும். இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும். சிறிதளவு மல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

சிறப்பு

அனைவருக்கும் ஏற்றது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் கருப்பைப் பிரச்சினைகளைத் தடுக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

சனி, 21 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon