Jரிலாக்ஸ் டைம்: மொச்சை சாலட்!

health

டயட்டை மேற்கொள்பவர்கள், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ஒரு பவுல் சாலட்டை ஒருவேளை உணவுக்குப் பதில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அப்படி முடியாதவர்கள் ரிலாக்ஸ் டைமில் இந்த மொச்சை சாலட் செய்து சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

**எப்படிச் செய்வது?**

100 கிராம் வெள்ளை மொச்சையை நான்கு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயம் ஒன்று, தக்காளி (விதை நீக்கவும்) ஒன்று, குடமிளகாய் ஒன்று… அனைத்தையும் நறுக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் வேகவைத்த மொச்சை, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி, உலர்திராட்சை 20 கிராம், மிளகுத்தூள் இரண்டு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி சிறிதளவு, இரண்டு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு அனைத்தையும் நன்றாகக் கலந்து பரிமாறவும்.

**சிறப்பு**

மொச்சையில் 20-28 சதவிகிதம் புரதம், அதேபோல வைட்டமின்களும், கனிமச்சத்தும் அதிகம். உடல் உஷ்ணத்தை மட்டுப்படுத்தும், அளவாகச் சாப்பிட்டால் வயிற்றுப் பொருமலைக் குறைக்கும், செரிமானத்தைத் தூண்டும், மலத்தைப் பெருக்கும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *