மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

ரிலாக்ஸ் டைம்: கேரட் தேங்காய்ப்பால் ஜூஸ்!

ரிலாக்ஸ் டைம்: கேரட் தேங்காய்ப்பால் ஜூஸ்!

வெயில் காலத்தில் சருமத்துடன் கூந்தலையும் பராமரிக்க வேண்டியது அவசியம். கேரட்டும் தேங்காய்ப்பாலும் கோடைக்கேற்ற சிறந்த நிவாரணிகள் என்று சொல்லலாம். குறிப்பாக இவை சருமத்துக்கும் கூந்தலுக்கும் மிகவும் நல்லது. உணவில் தொடர்ந்து தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் முடி உதிர்வதைத் தவிர்க்க முடியும்.

எப்படிச் செய்வது?

மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ஒரு கேரட்டைச் சுத்தம் செய்து நறுக்கி அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு வடிகட்டவும். ஒரு தேங்காயைத் துருவி நன்கு அரைக்கவும். அதை மூன்று கப் சுடுநீரில் போட்டு, சிறிது நேரம் கழித்து வடிகட்டி ஆறவிடவும். இப்போது ரெடியாக வைத்திருக்கிற கேரட் ஜூஸ், தேங்காய்ப்பால் இரண்டையும் கலந்து கொஞ்சம் தேன் சேர்த்துப் பருகலாம்.

சிறப்பு

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சருமப் பாதுகாப்புக்கு மிகவும் நல்லது. கண் அழற்சியைப் போக்கும். தாய்ப்பாலுக்கு அடுத்ததாகக் கொள்ளப்படுவது இந்தத் தேங்காய்ப் பால். வைட்டமின் பி1, வைட்டமின் பி3, வைட்டமின் பி5, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியவை அடங்கியுள்ளன. தேங்காய்ப்பாலில் லாரிக் ஆசிட், புரோட்டீன் நிறைந்திருப்பதால் முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon