ADVERTISEMENT

ஹெல்த் டிப்ஸ்: 7 நாட்களுக்கு 7 வகையான ஜூஸ்!

Published On:

| By Monisha

health tips 7 juices for 7 days

இயற்கையான முறையில் பளபளப்பான சருமத்தை பெற விரும்பினால் இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள 7 வகையான ஜூஸ்களை வாரத்தின் 7 நாட்களுக்கு எடுத்து கொள்ளலாம்.

நாள் 1 : கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ்

ADVERTISEMENT

இந்த கலவையானது சருமத்திற்கு அதிக நன்மைகளை தருகின்றன. இதில் நிறைந்துள்ள பொட்டாசியம், துத்தநாகம், போலிக் அமிலம், மாங்கனீசு மற்றும் வைட்டமின் C போன்ற அத்தியாவசிய சத்துக்கள் சருமத்திற்கு அதிகபட்ச நன்மைகளை தருகின்றன.

நார்ச்சத்துக்கள் நிறைந்த கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் உங்களுடைய வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

ADVERTISEMENT

நாள் 2 : வெள்ளரிக்காய் ஜூஸ்

ADVERTISEMENT

சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளவும், சருமத்தை பளபளப்பாக மாற்றவும் வெள்ளரிக்காய் ஜூஸை எடுத்துக் கொள்ளலாம்.

வெள்ளரிக்காயில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் மற்றும் காஃபிக் அமிலம் நீர்த்தேக்கத்தை தடுக்க உதவுகிறது. இவை சருமத்தில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்க உதவும்.

நாள் 3 : தக்காளி ஜூஸ்

தக்காளியில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் முகச்சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளை தடுக்கின்றன. இவை வயதான தோற்றத்தை குறைக்கவும், சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.

வெயிலினால் ஏற்பட்ட ஸ்கின் டேன் நீங்க, சரும பொலிவை அதிகரிக்க தக்காளி ஜூஸை உங்கள் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நாள் 4 : மாதுளை ஜூஸ்

மாதுளை இரத்தத்தை சுத்திகரிக்கும் திறன் கொண்டது இது சருமத்திற்கு ஊட்டமளித்து சரும பொலிவை அதிகரிக்கிறது. மாதுளையில் காணப்படும் முதுமையை எதிர்க்கும் பண்புகள், சருமத்தை அழகாகவும் இளமையாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன.

சரும பொலிவை தக்க வைத்துக்கொள்ள மாதுளை ஜூஸை தவறாமல் குடித்து பயன்பெறுங்கள்.

நாள் 5 : கீரை ஜூஸ்

பச்சை இலை காய்கறிகளில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் ஃப்ரீ ரேடிகல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றன.

health tips 7 juices for 7 days

நாள் 6 : பாப்பாளி ஜூஸ்

பப்பாளியில் உள்ள பப்பைன் என்ற நொதி சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற உதவுகிறது. பப்பாளி ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் மென்மையான பளபளப்பான சருமத்தை பெறலாம்.

health tips 7 juices for 7 days

நாள் 7 : கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு பயன்படுத்துவதுடன் அதனை ஜூஸ் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம். ஃபிரஷ் ஆக எடுக்கப்பட்ட கற்றாழை மடல்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த ஜூஸில் பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன. இதில் உள்ள சத்துக்கள் சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவுகின்றன.

health tips 7 juices for 7 days

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சுபஸ்ரீ

IND vs ENG: 6வது வெற்றி.. தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்!

வேலைவாய்ப்பு : CSIR-CEERI நிறுவனத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share