நிறைய பேர், ‘நெல்லிக்காய் டேஸ்ட் பிடிக்காது, என்னால சாப்பிட முடியாது’ என்று கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால், இதில் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் இருக்கின்றன.
வைட்டமின்கள் A, B, C, E, D, B1, B2, B6, B9, B12, கால்சியம், இரும்புச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், ஜிங்க், கரோட்டின், ஃபிளவனாய்ட்ஸ், ஆந்தோசயனின்ஸ், மினரல்கள் என எண்ணிலடங்கா சத்துப்பெட்டகம் அது.
நெல்லிக்காய், பல்வேறு உடல் பிரச்சினைகளை சரி செய்யக் கூடியது. குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், நரம்பு மண்டலம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும், ரத்தக் கொழுப்பைக் குறைக்கும்.
அதனால்தான் இதை, ‘காயகற்பக் கனி’ என்று போற்றிப் புகழ்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
இப்படிப்பட்ட நெல்லிக்காயை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள்… இப்படிப்பட்ட வழிகளில் சாப்பிடலாம்.
நெல்லிக்காயைக் கொட்டை நீக்கி, நறுக்கிக் காயவைத்து அரைத்துக்கொள்ளவும். 2.5 கிராம் நெல்லித்தூள், 2.5 கிராம் மஞ்சள் தூள் என எடுத்து, வெந்நீரில் கலந்து காலை, இரவு, உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட்டு வர,
சர்க்கரை நோய் கட்டுப்படுவதுடன் அந்நோயின் தீவிரத்தால் ஏற்படும் கண் பாதிப்பு, இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, ரத்த சோகை, நரம்பு மண்டல பாதிப்பு ஆகியவற்றை சரி செய்யும்.
நெல்லிக்காய் ஒன்று, மாதுளம் பழம் ஒன்று, கேரட் ஒன்று, பீட்ரூட் ஒன்று, இஞ்சி சிறிதளவு, கறிவேப்பிலை கைப்பிடி அளவு, கொத்தமல்லி, புதினா சிறிதளவு சேர்த்து அரைத்து வடிகட்டி, தேன் வேண்டிய அளவு கலந்து தொடர்ந்து குடித்து வர, நாள்பட்ட ரத்த சோகை, வயிற்றுப் புண்கள் சரியாகும்.
இது மட்டுமல்லாமல்… நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் லேகியம், நெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் சர்பத், நெல்லிக்காய் தேனூறல், நெல்லிக்காய் துவையல், நெல்லிக்காய் புளிக்குழம்பு என நம் உணவில் பல வகைகளிலும் நெல்லிக்காயைச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
நெல்லிக்காயை மூன்று வயதிற்கு மேல் யார் வேண்டுமானாலும் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : காளான் வறுவல்
டி20 உலக கோப்பையில் வென்றால்… பாகிஸ்தான் அறிவித்த பரிசு!