மரிக்கொழுந்தை அதன் வாசனைக்காக மட்டுமே நாம் அறிவோம். ஆனால், அது எண்ணெய் தன்மையையும் தன்னுள் அடக்கிவைத்திருக்கும் ஓர் இயற்கை மூலிகை.
தலையின் ஸ்கால்ப் முதல் பாதம் வரை, சருமத்தை மென்மையாக்கும் தன்மை மரிக்கொழுந்துக்கு உண்டு. எனவே, மரிக்கொழுந்தை எண்ணெயாகக் காய்ச்சி ஸ்கால்ப், கேசம் முதல் உடலிலும் தடவிக்கொள்ளலாம். இது உலர்வான கேசத்தை மென்மையாக்கும், ஸ்கால்ப்பை கண்டிஷன் செய்து மென்மையாக்கி முடியை நெருக்கமாக வளர வைக்கும்.
மரிக்கொழுந்து எண்ணெய்
கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் 100 கிராம் குச்சிகள் நீக்கப்பட்ட ஃபிரெஷ்ஷான மரிக்கொழுந்து இலைகளைப் போட்டுக் காய்ச்சவும். கலவை தைலப் பதத்துக்கு வந்தவுடன் அதில் ஒரு டீஸ்பூன் வெட்டிவேரைச் சேர்த்து அடுப்பை அணைத்து அப்படியே மூடிவிடவும் (இதில் வெட்டிவேர் ஒரு பிரிசர்வேட்டிவ்வாகச் செயல்படும்). இந்த எண்ணெயைத் தலைக்கு மட்டுமல்லாது பாதங்கள் மற்றும் நகங்களில் தொடர்ந்து தடவிவரும்போது, அந்தப் பகுதிகளில் உள்ள சொரசொரப்புத் தன்மை மறைந்து மென்மையாகும்; நகங்கள் உடையாமல் இருக்கும். பாத வெடிப்புக்கும் இது நிவாரணம் தரும். வாரம் இருமுறை, இந்த எண்ணெயைச் சிறிது சூடாக்கி தலை மற்றும் உடல் முழுக்கத் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்தும் குளிக்கலாம்.
மரிக்கொழுந்து ஃபேஸ் பேக்
முதல்நாள் இரவு ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பை ஊறவைக்கவும். மறுநாள் காலையில் இதனுடன் ஒரு டீஸ்பூன் பால் மற்றும் இரண்டு டீஸ்பூன் மரிக்கொழுந்து இலைகளைச் சேர்த்து விழுதாக அரைக்கவும். இதை முகத்தில் பேக்காகப் போட்டுவந்தால் மென்மையான மாசுமருவற்ற சருமம் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டிகர்… சாபமா? சாம்பிளா? அப்டேட் குமாரு
சோனியா, நட்டா, எல்.முருகன்… : மாநிலங்களவை எம்.பி.க்களாக தேர்வு!