எலான் மஸ்க் வைத்திருந்தது ஒரே பேண்ட் சட்டைதான்… வறுமையை விவரித்த தாய்!

Published On:

| By Minnambalam Login1

இப்போது, உலகின் மிகப் பெரிய பணக்காரராக எலான் மஸ்க் இருக்கலாம். ஆனால், 1990 களில் அவரின் வாழ்க்கை மிகுந்த துயரம் நிறைந்ததாகவே இருந்தது. எலான் மஸ்க்கின் தந்தை எரல் மஸ்க் தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர். தாயார் மயி மஸ்க் கனடாவில் பிறந்து தென்னாப்ரிக்காவில் வளர்ந்தவர். தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியா நகரில் வசித்த இந்த தம்பதிக்கு 1971 ஆம் ஆண்டு எலான் மஸ்க் மகனாக பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரியும் சகோதரரும் உண்டு.

இளம் வயதில் தந்தை பிரிந்து சென்று விட தாயார் மயி மஸ்க் தன் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார். தனது குழந்தைகளுடன் கனடாவின் டொரான்டோ நகருக்கு குடி பெயர்ந்தார். அங்கு, தன் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

1990 ஆம் ஆண்டுகளில் எலான் மஸ்க் வங்கி ஒன்றில் வேலை பார்த்துள்ளார். அப்போது, 99 டாலர் மதிப்பில் ஒரு பேண்ட்,சர்ட், வாங்கியுள்ளார். கறுப்பு மற்றும் வெள்ளை வண்ணத்திலான அந்த ஒரே சட்டைதான் அவரிடத்தில் பல ஆண்டு காலமாக இருந்துள்ளது.

இது குறித்து தற்போது 76 வயதான் எலானின் தாய் மயி மஸ்க் கூறுகையில், ‘எனது கணவரின் கொடுமை காரணமாக நாங்கள் கனடாவுக்கு மாறினோம். அப்போது, பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட பொருட்களை தான் வாங்குவோம். புதியதாக வாங்க எங்களிடத்தில் பணம் இல்லை. ஏற்கனவே, பயன்படுத்தப்பட்ட பேண்ட் , சட்டை ஒன்றை என் மகனுக்கு வாங்கிக் கொடுத்தேன்.

மகனுக்காக என்னால் அதற்கு மேல் எதுவும் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. கையில் பணம் இல்லையென்றாலும் நாங்கள் அப்போது மகிழ்ச்சியாகவே இருந்தோம். பெரும்பாலான நேரங்களில் சாண்ட்விச்சும், வெண்ணெயும்தான் எங்களின் உணவாக இருந்தது. அந்த காலக்கட்டத்தில் வெளியே சென்று நாங்கள் சாப்பிட்டதே இல்லை’ என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

1990களில் அதே பேண்ட், சட்டை அணிந்தபடி இருக்கும் எலான் மஸ்க்கின் புகைப்படத்தையும் தாயார் மயி மஸ்க் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

கொடுமையிலும் கொடுமை: மீட்புப்பணியில் விமானப்படை… கேரளாவிடம் 136 கோடி கேட்கும் மத்திய அரசு!

இளங்கோவன் மறைவு… அஞ்சலி செலுத்த தமிழகம் வரும் ராகுல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share