சென்னை HCL-ல் சூப்பர் வேலை… அனுபவம் தேவையில்லை! ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் நேரடி இன்டர்வியூ… ரெடியா?

Published On:

| By Santhosh Raj Saravanan

hcl chennai walk in interview jan 2026 customer service jobs freshers

“ஐடி கம்பெனில வேலை பார்க்கணும், ஆனா எனக்கு கோடிங் (Coding) தெரியாதே… நான் என்ன பண்றது?” என்று கவலைப்படும் ஆர்ட்ஸ் & சயின்ஸ் மாணவர்களா நீங்கள்? இதோ உங்களுக்காகவே ஒரு அறிய வாய்ப்பு!

சென்னையின் முன்னணி ஐடி நிறுவனமான HCL Technologies, தற்போது ‘கஸ்டமர் சர்வீஸ் ரெப்ரசென்டேட்டிவ்’ (Customer Service Representative – International Voice Process) பணிக்கான ஆட்களைத் தேர்வு செய்கிறது. இது முழுக்க முழுக்க குரல் சார்ந்த பணி (Voice Process) என்பதால், தொழில்நுட்ப அறிவு (Technical Knowledge) தேவையில்லை!

ADVERTISEMENT

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • கல்வித் தகுதி: பி.காம், பிபிஏ, பி.ஏ, பி.எஸ்சி, எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.காம் போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் (Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • ஆண்டு: 2025ஆம் ஆண்டில் கல்லூரிப் படிப்பை முடித்த ஃப்ரெஷர்ஸ் (Freshers) மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள். கையில் கடைசி செமஸ்டர் ரிசல்ட் காப்பி (Result Copy) வைத்திருப்பது அவசியம்.
  • இன்ஜினியரிங் (B.E/B.Tech) மற்றும் எம்.சி.ஏ (MCA) படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை விவரம்:

ADVERTISEMENT
  • பதவி: Customer Service Representative (International Voice Process).
  • ஷிப்ட்: இது ‘யுஎஸ் ஷிப்ட்’ (US Shift) என்பதால், இரவு நேரப் பணியில் (Night Shift) ஈடுபடத் தயாராக இருக்க வேண்டும்.
  • கேப் வசதி: ஊழியர்களுக்கு இலவச பிக்-அப் மற்றும் டிராப் (Cab Facility) வசதி உண்டு. பெண் ஊழியர்களுக்கு இது முற்றிலும் இலவசம்.

இன்டர்வியூ எப்போது? எங்கே?

இது நேரடி நேர்காணல் (Walk-in Interview).

ADVERTISEMENT
  • தேதி: ஜனவரி 2 மற்றும் ஜனவரி 3, 2026.
  • நேரம்: காலை 11.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை.
  • இடம்: HCL Tech ETA 3, Sandhya Infocity, OMR, Rajiv Gandhi Salai, Near AGS Cinemas, Navalur, Chennai – 600 130.

சம்பளம்:

சம்பளம் குறித்த துல்லியமான விவரம் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தொழில்துறையின் தரத்திற்கு ஏற்ப (Best in Industry) வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது உங்கள் திறமையைப் பொறுத்து மாறுபடும்.

தம்பிங்களா… இன்ஜினியரிங் படிக்காதவங்களுக்கு ஐடி கம்பெனிக்குள்ள நுழைய இது ஒரு நல்ல என்ட்ரி டிக்கெட். ‘நைட் ஷிப்ட்’னு யோசிக்காதீங்க, HCL மாதிரி பெரிய கம்பெனில வேலை பார்க்குறது பெரிய கௌரவம்.

இன்டர்வியூக்கு போகும்போது டிப்-டாப்பா டிரெஸ் பண்ணிட்டு போங்க. ஆங்கிலத்துல பேசுறது ரொம்ப முக்கியம், அதனால பயப்படாம கான்பிடென்ட்டா பேசுங்க. உங்க ரெஸ்யூம் (Resume), போட்டோ, ஆதார் கார்டு, டிகிரி சர்டிபிகேட் எல்லாத்தையும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் காப்பி எடுத்துட்டு போங்க. ஆல் தி பெஸ்ட்!”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share