டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை!

By Pandeeswari Gurusamy

|

Published on 9 Sep 2025, 5:19 PM

HC stays arrest warrant against DSP Shankar

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் மீதான மாவட்ட நீதிமன்றத்தின் கைது உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலஜாபாத் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூசிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவர் தனது மனைவி பார்வதியுடன் அப்பகுதியில் உள்ள பேக்கரிக்கு சென்றார். பேக்கரி உரிமையாளருக்கும், பார்வதி- முருகன் தம்பதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முருகன், காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், குறிப்பாக பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் (SC/ST Act) கீழ் நடவடிக்கை எடுக்க கோரியும், புகார் அளிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் காவல் துறை தரப்பிலிருந்து எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் முருகன் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் முன் நேற்று (செப்டம்பர்- 8) விசாரணைக்கு வந்தது. புகார் மீது வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக தெரிவித்த நீதிபதி செம்மல், டிஎஸ்பி சங்கர் கணேசை உடனடியாக கைது செய்து செப்டம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து டிஎஸ்பி, நீதிபதி வாகனத்திலேயே அழைத்து செல்லப்பட்டார். இதற்கிடையில் டிஎஸ்பி சங்கர் கணேஷ், காவல்துறையினர் உதவியுடன் நீதிபதி வாகனத்தில் இருந்து காவல் துறையினர் வாகனத்தில் ஏறி தப்பிவிட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் 30 நிமிடங்களுக்கு பின் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கிளை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து டிஎஸ்பி சங்கர் கணேஷ் தப்பி ஓடவில்லை கழிவறைக்கு சென்றார் என விளக்கம் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் போலீஸ் தரப்பில், டிஎஸ்பி சங்கர் கணேஷுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது இன்று (செப்டம்பர் -9) டிஎஸ்பி சங்கர் கணேஷ் மீதான மாவட்ட நீதிமன்றத்தின் கைது உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும் அடிதடி வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை என சங்கர் கணேஷ் மீது காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel