ஆதியோகி சிலைக்கு உரிய அனுமதி உள்ளது: ஈஷா அறக்கட்டளை!

Published On:

| By Monisha

having permission for adiyogi isha

ஈஷா மையத்தில் உள்ள ஆதியோகி சிலைக்கு உரிய அனுமதி உள்ளது என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கோவையில் ஈஷா மையம் கட்டியுள்ள ஆதியோகி சிலை மற்றும் கட்டிடங்கள் உள்ள வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 2017 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 24) சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், “ஈஷா அறக்கட்டளைக்குக் கட்டிடம் கட்ட அனுமதியோ, தடையில்லா சான்றோ ஈஷா அறக்கட்டளை நிர்வாகி பெறவில்லை. அனுமதி பெற்றதற்கான ஆவணங்களும் இல்லை” என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், மனுதாரரும், ஈஷா அறக்கட்டளை தரப்பும் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை கோவை நகர திட்ட இணை இயக்குநர் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வில் அதில் சம்மந்தப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை என்று தெரியவந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் ஆதியோகி சிலைக்கான உரிய அனுமதி உள்ளது என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இது குறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல்கள் எங்களிடம் உள்ளது. அதை எங்கேயும் எப்போதும் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம். ஆதியோகி சிலை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதிகளை பெற்றுள்ளோம். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிகாரிகள் முன் அதை சமர்ப்பிப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மோனிஷா

சந்திராயனுக்கு ஒரு பீரு… சதுரங்கத்துக்கு ஒரு பீரு: அப்டேட் குமாரு

“அரசு செலவில் எனது மகளுக்கு திருமணமா?”: தயாநிதி மாறனுக்கு ஆளுநர் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share