‘மகனை பார்க்க முடியாமல் தவிக்கிறேன்’- ஷிகர் தவான் உருக்கம்!

Published On:

| By Kumaresan M

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஷிகர் தவானும் ஒருவர். இவர், ஏற்கெனவே திருமணம் ஆகி விவகாரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ஆயிஷா முகர்ஜி என்பவரை, கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். Haven’t seen son in two years- Dhawan

ஷிகர் தவானுக்கு ஜோராவர் என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில், இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆயிஷா, ’தன்னை மனதளவில் துன்புறுத்துவதாகவும் அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும்’ எனக் கேட்டு ஷிகர் தவான் டெல்லி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து, இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இப்போது, மகன் தாயுடன் வசித்து வருகிறான். வீடியோ காலில் தனது மகனுடன் ஷிகர் தவான் பேசிக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மகனை தனக்கு காட்ட மறுப்பதாக ஷிகர் தவான் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் ஷிகர் தவான் கூறியிருப்பதாவது, “எனது மகனுடன் பேசி அவனை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இது எனக்கு கடினமான தருணமாக இருக்கிறது.

எனினும், கஷ்டப்பட்டு இந்த சவாலை சமாளித்து வருகிறேன். தற்போது, அவனுக்கு 11 வயதாகிறது. அவனது வாழ்க்கையில் இரண்டரை வருடங்கள் மட்டுமே அவனுடன் இருந்துள்ளேன். துயரமாக இருப்பது எதையும் மாற்றி விடாது. ஆனால், நான் தியானம் செய்கிறேன். தியானம் வழியான மகனுடன் பேசுதை போன்று உணருகிறேன்.

இப்போது என்னை முற்றிலுமாக போனில் பிளாக் செய்து விட்டார்கள். ஆனாலும், நான் ஒரு தந்தையாக எனது மகனுக்கு மெசேஜ் அனுப்புகிறேன். படித்தாலும் சரி படிக்கா விட்டாலும் சரி ஒரு தந்தையாக நான் எனது கடமையை செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். Haven’t seen son in two years- Dhawan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share