ADVERTISEMENT

சிறுமி ஹாசினி பலாத்கார படுகொலை: தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி

Published On:

| By Mathi

Hasini Case

சிறுமி ஹாசினி பலாத்கார படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி
செய்துள்ளது.

2017-ஆம் ஆண்டு சென்னை போரூரைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

ஹாசினி பலாத்கார படுகொலை வழக்கில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் கீழ் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்தன.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார். இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த அக்டோபர் மாதம் 8-ந் தேதி, தஷ்வந்தை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

ADVERTISEMENT

இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனுவை இன்று நவம்பர் 27 விரித்த உச்சநீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share