விஜய்யின் நாளைய கன்னியாகுமரி பிரச்சாரம் ரத்து?

By Pandeeswari Gurusamy

|

Published on 11 Apr 2026, 6:26 PM

Vijay TVK Candidates

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாளை கன்னியாகுமரியில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு உரிய அனுமதியும் பெறப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று கடலூரில் நடக்கவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாளைய கன்னியாகுமரி பிரச்சாரமும் ரத்து செய்யப்படும் என்ற செய்திகள் வெளியாகின.

ஆனால், நாளை(ஏப்ரல் 12) திட்டமிட்டபடி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரத்தில் விஜய் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாளை பிற்பகல் 3 மணியளவில் கன்னியாகுமரியில் அவர் பிரச்சார வாகனத்தில் இருந்தபடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

ADVERTISEMENT

நாளை காலை விஜய் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்குச் செல்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி செல்ல உள்ளார். நாளை மாலை 4 மணியளவில் கன்னியாகுமரி பகுதியில் ஜீரோ பாயிண்ட் பகுதியில் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel