திருமணத்தை மீறிய உறவு… கழுத்து அறுக்கப்பட்டு கால்வாயில் கிடந்த மாடல் அழகி…. குற்றவாளி பிடிபட்டது எப்படி?

Published On:

| By christopher

Haryana Model Sheetal Killed By Married Lover

கால்வாயில் கவிழ்ந்து கிடந்த காரில் இருந்து கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பல்வேறு காயங்களுடன் ஹரியானா மாடல் அழகி உடல் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. Haryana Model Sheetal Killed By Married Lover

ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் அழகியும், நடிகையுமான ஷீத்தல் (24). இவரை கடந்த 14ஆம் தேதி முதல் காணவில்லை. இந்த நிலையில் ஷீத்தல் உடலானது 15ஆம் தேதி சோனிபட்டில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து கிடந்த காரில் இருந்து தொண்டை அறுக்கப்பட்ட நிலையில் பல்வேறு காயங்களுடன் மீட்கப்பட்டது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பானிபட் போலீசார், தங்களது விசாரணையைத் தொடங்கினர். அப்போது அவர்களுக்கு சோனிபட்டில் உள்ள விடுதியின் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன.

அதில், ஷீத்தல் கையில் ஒரு கைப்பையுடனும், அவருடன் ஆண் நண்பர் ஒருவர் நீல நிற டிராலி ஷூட்கேஸுடன் காரில் ஏறுவதும் தெரிந்தது.

ADVERTISEMENT

தொடர்ந்து அந்த ஆண் நண்பர் சுனில் என அறிந்து போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் அளித்த வாக்கு மூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

ADVERTISEMENT

இதுதொடர்பாக பானிபட் துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சிம்மி என்றும் அழைக்கப்படும் கொலையான ஷீத்தல், பானிபட்டில் உள்ள அஹார் கிராமத்திற்கு ஒரு இசை வீடியோ படப்பிடிப்பிற்காக வந்திந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சுனிலைச் சந்தித்தார்.

இருவரும் ஏற்கெனவே திருமணமானவர்கள். கணவரை பிரிந்து வாழும் ஷீத்தலுக்கு 5 வயது குழந்தையும், சுனிலுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

எனினும் சுனிலுக்கு சொந்தமான ஹோட்டலில் கடந்த சில ஆண்டுகளாக ஷீத்தல் பணியாற்றி வந்த நிலையில், இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி இரவு ஒரு ஆல்பம் படப்பிடிப்பிற்காக பானிபட்டில் உள்ள அஹார் கிராமத்திற்கு ஷீத்தல் வந்திருந்தார். இரவு 10:30 மணியளவில், சுனில் வந்து அவளை தனது காரில் அழைத்துச் சென்றார். சிறிது நேரம் மது அருந்திய பிறகு, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதிகாலை 1:30 மணியளவில், ஷீதல் தனது சகோதரிக்கு வீடியோ அழைப்பை மேற்கொண்டு, சுனில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறியுள்ளார். எனினும் சிறிது நேரத்திலேயே அவரது தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின்னர் அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை.

அதன்பின்னர் தான் ஷீத்தல் கழுத்தை அறுத்து கொலை செய்து, கால்வாயில் காரை தள்ளிவிட்டு விபத்து போன்று மருத்துவமனையில் நாடகமாடியதாக சுனில் ஒப்புக்கொண்டதை தெரிவித்தார்.

கடந்த 15ஆம் தேதி பானிபட்டில் கார் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் ஷீத்தல் உடலை காணவில்லை. எனினும் ஒரு நாள் கழித்து நேற்று தான் சோனிபட்டின் கார்கோடாவில் உள்ள ஒரு கால்வாயில் ஷீத்தலின் உடல் 80 கி.மீ தொலைவில் மீட்கப்பட்டது. கை மற்றும் மார்பில் பச்சை குத்தப்பட்டிருந்ததன் அடிப்படையில் அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வட கிழக்கு மாநிலமான மேகலாயாவில் சமீபத்தில் ஹனிமூன் சென்ற இடத்தில் காதலர் மற்றும் கூலிபடையினருடன் சேர்ந்து கணவரை மனைவி கொன்ற நிலையில், தற்போது நடந்துள்ள ஹரியானா மாடல் அழகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share