ஹரியானா தேர்தல் : காங்கிரஸை காலி செய்த ஆம் ஆத்மி!

Published On:

| By christopher

Haryana Election: Is Aam Aadmi Party the reason for Congress's setback?

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து இன்று (அக்டோபர் 8) காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தொடக்க வாக்கு எண்ணிக்கையில் 55 இடங்களில் முன்னிலை வகித்த காங்கிரஸ், ஹரியானாவில் பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையை கட்சி தொண்டர்களிடையே ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

ஆனால் 10 மணியளவில் வேகமாக முன்னேறிய பாஜக பெரும்பான்மைக்கு தேவையான 46க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றது.

தற்போது 12 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில் பாஜக 49 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களிலும், ஐஎன்எல்டி, பிஎஸ்பி தலா ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 இடத்திலும் முன்னிலை வகிப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதேவேளையில் 90 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட தேசிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி ஒரு இடங்களில் கூட முன்னிலை பெற முடியவில்லை.

டெல்லியிலும், பஞ்சாபிலும் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சி, அண்டை மாநிலமான ஹரியானாவிலும் ஆட்சியில் அமர காய் நகர்த்தியது.

ADVERTISEMENT

இதற்கிடையே டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமீனில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவிற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

அவரது பிரச்சாரம் தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹரியானா தேர்தலில் ஒரு இடங்களில் அந்த கட்சி முன்னிலை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும் முன்னிலையில் உள்ள பாஜகவிற்கும், இரண்டாவது இடத்தில் உள்ள காங்கிரஸுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் சில தொகுதிகளில் ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரிந்த வாக்குகளும் காங்கிரஸ் கட்சியின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தேர்தல் வியூக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உதாரணத்திற்கு, 12 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ஃபடேஹாபாத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் துர்கா ராம் 1,223 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பல்வான் சிங்கை விட முன்னிலையில் உள்ளார்.

அதே தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் 2,145 வாக்குகள் பெற்றுள்ளார்.

இவ்வாறு ஹரியானா தேர்தலில் காங்கிரஸின் பின்னடைவிற்கு ஆம் ஆத்மி கட்சி பிரித்த வாக்குகள் காரணமாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கோவைக்கு செந்தில்பாலாஜி, நெல்லைக்கு நேரு, குமரிக்கு தங்கம்… பொறுப்பு அமைச்சர்களையும் மாற்றிய ஸ்டாலின்

நடிகர் யோகிபாபு சொல்றதை கேளுங்க… உங்க பணம் பாதுகப்பாக இருக்கும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share