RCBvsKKR : மீண்டும் தொடங்கிய ஐபிஎல் 2025 தொடரானது நேற்று (மே 17) பெங்களூரு – கொல்கத்தா அணிகள் இடையேயான போட்டியுடன் தொடங்க இருந்தது. ஆனால் மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. Harsha Bhogle Speech about Virat Kohli
ஆர்சிபி வீரர் கோலி டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவருக்கு மரியாதை செய்யும் விதமாக பெரும்பாலான ரசிகர்கள் வெள்ளை நிற டெஸ்ட் டீசர்ட்டில் மைதானத்திற்கு வந்திருந்தனர். போட்டி இரத்தானதால் அவர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் போட்டிக்கு முன்பாக விராட் கோலி குறித்து பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, கோலி குறித்து பேசியது கவனம் பெற்றுள்ளது.
அவர் பேசுகையில், “விராட் கோலி கேப்டனாக இரண்டு முக்கியமான விஷயங்களை செய்தார்.
ஒன்று, இளம் வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டும் மிகச்சிறந்தது என்பதை உணர வைத்தார்.
இரண்டாவது, ஒரு கேப்டனாக தன்னைச் சுற்றி வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக் கொண்டு வென்றார். இது அதற்கு இந்திய அணியின் முந்தைய கேப்டன்கள் செய்யாதது.
என்னைப் பொறுத்தவரை, 2014ஆம் ஆண்டு அடிலெய்டில் கேப்டனாகவும் பேட்டராகவும் கோலி ஆடிய விதத்தை மறக்கவே முடியாது.
நான்காவது இன்னிங்ஸில் 370 ரன்களை சேஸ் செய்ய வேண்டும். அடிலெய்டில் அதற்கு வாய்ப்பே இல்லை. ஆனாலும் கோலி சேஸூக்கு ஆக்ரோஷமாக சென்றார். அந்தப் போட்டியை வெறும் 48 ரன்களில் இந்தியா தோற்றது. ஆனால், கோலியின் அணுகுமுறை அணிக்கு ஒரு புது உத்வேகத்தை கொடுத்தது.
ராகுல் டிராவிட்டிடம் முன்பு ஒரு முறை பேசிக்கொண்டிருந்தபோது, அவர் “இந்த டி20 காலக்கட்டத்தில், கோலி மாதிரியான இளம் வீரர் டெஸ்ட் ஆட முன் வந்தால் அதன்மூலம் இன்னும் 2 தலைமுறைக்கு இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் உயிர்ப்போடு இருக்கும்” என்றார். Harsha Bhogle Speech about Virat Kohli
உண்மையில் கோலி அதை செய்து காட்டினார். இதோ இப்போது கில்லும் ஜெய்ஸ்வாலும் வந்துவிட்டார்கள். கோலி அவர்களிடம் பேட்டனை கொடுத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்துவத்தை கோலி உணர்த்தாவிடில் இந்த வீரர்கள் இந்தியாவுக்காக டெஸ்ட் ஆட வந்திருப்பார்களா என தெரியாது.
டெஸ்ட் கிரிக்கெட் நீண்ட காலமாக அபாய நிலையில் இருக்கிறது. அதற்கு விராட் கோலி மாதிரியான தூதுவர்கள் ரொம்பவே முக்கியம்” என ஹர்ஷா பேசினார்.

அதே போன்று மற்றொரு வர்ணணையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் பேசுகையில், ‘விராட் கோலி என்கிற பெயரை கேட்டாலே ரசிகர்கள் காந்தம் போல ஈர்க்கப்படுகின்றனர். பல ஆண்டுகால கடின உழைப்பால்தான் விராட் கோலி இந்த நிலையை எட்டினார்.
கோலி மற்ற இந்திய பேட்டர்களிலிருந்து வித்தியாசமானவர். அவர்களிலிருந்து இவரின் பாணியும் குணாதிசயமும் வேறு. கோலி இப்போதைய சாதிக்க துடிக்கும் இளம் தலைமுறையின் துடிப்பான பிரதிநிதியாக இருந்தார்.
கிரிக்கெட்டை விட தனிப்பட்ட வீரர்கள் பெரிதில்லை என்பார்கள். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் அபாயத்தில் இருந்தபோது கோலிதான் தன்னுடைய ஆட்டத்தின் வழி டெஸ்ட் போட்டியை நோக்கி கவனத்தை ஈர்த்தார். Harsha Bhogle Speech about Virat Kohli
கோலிக்கு டெஸ்ட் போட்டிகள் தேவை என்பதை விட, டெஸ்ட் போட்டிகளுக்குதான் கோலி தேவைப்பட்டார். Harsha Bhogle Speech about Virat Kohli
ஒரு முறை நியூசிலாந்துக்கு சென்றிருப்போம். அங்கே மெக்கல்லம் நமக்கு எதிராக முச்சதம் அடிப்பார். இந்திய அணி எந்தவிதத்திலும் சவாலளிக்காமல் வெற்றிக்கான போராட்டமே இல்லாமல் போன காலக்கட்டமெல்லாம் இருந்தது. கோலி கேப்டனாக ஆன பிறகு அப்படி ஒரு போட்டியை கூட பார்க்கவில்லை. ஏன், ஒரு செஷனை கூட பார்த்ததில்லை. தோல்வியடைந்தாலும் பரவாயில்லை என்கிற துணிச்சலோடு வெற்றிக்காக போராடினார்” என புகழாரம் சூட்டினார்.