நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சிந்து சமவெளி படத்தில் அறிமுகமான ஹரிஷ் கல்யாண், 2018ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர்.
அதன் பின்னர், பல படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் “பார்க்கிங்”.
இந்த படம் திரையரங்குகளில் மட்டும் ரூ.17 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், “பார்க்கிங்” திரைப்படத்தை தயாரித்த பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம், தற்போது ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இந்த படத்தை “அந்தகாரம்” படத்தை இயக்கிய விக் நாராஜன் இயக்குகிறார்.
நேற்று (ஜூன் 29) ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் பரிசாக ஹரிஷ் கல்யாணின் அடுத்த பட அறிவிப்பை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்தது.
இதுகுறித்து பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனம் தயாரிப்பில் “அந்தகாரம்” படத்தின் இயக்குநர் விக் நாகராஜன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் புதிய படத்தில் நடிப்பதாக போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…