தனுசு ராசி நேயர்களே திரைப்படத்தைத் தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு திருப்பு முனையாக அமைந்தது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி. கமல் ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஹரீஷ் கலந்து கொண்டார். இது அவருக்கு புகழை மட்டுமின்றி பல ரசிகர்களையும் பெற்றுத்தந்தது.
அதனைத் தொடர்ந்து அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் பல பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது. அதன் பின்னர் ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘தனுசு ராசி நேயர்களே’ போன்ற திரைப்படங்களில் நடித்து ரொமான்டிக் ஹீரோவாக தனது பெயரைப் பொறித்துக் கொண்டார். இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படமும் அதே போன்ற கலர்ஃபுல் கதையாக இருக்கும் என்பதைப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உணர்த்துகிறது.
‘தாராளப்பிரபு’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அனிருத் நேற்று ( ஜனவரி 10 ) வெளியிட்டார். கிருஷ்ண மாரிமுத்து இயக்கும் இந்த திரைப்படத்தில் ஹரீஷுக்கு ஜோடியாகத் தான்யா நடிக்கிறார். ஸ்க்ரீன் சீன் மீடியா எண்ட்ர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்துக்கு சுப்பு மற்றும் சுதர்சன் நரசிம்மன் கதை எழுதி உள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அனிருத் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
Happy to release the rocking First-look of #DharalaPrabhu
Best wishes to all my favourites @iamharishkalyan @TanyaHope_offl @krishnammuthu @selvakumarskdop @sidd_rao @nixyyyyyy @Pallavi_offl @editorKripa @kabilanchelliah @SonyMusicSouth @onlynikilA @Screensceneoffl production pic.twitter.com/Qwp4bttlXc
— Anirudh Ravichander (@anirudhofficial) January 10, 2020
ஒரு ரொமான்டிக் காமெடி திரைப்படமாக தாராளப்பிரபு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
