குஜராத்தா? மும்பையா? ஹர்திக் பாண்டியா நிலைமை இப்படி ஆகிடுச்சே!

Published On:

| By christopher

கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடர்வார் என குஜராத் டைட்டன்ஸ் அணி  இன்று (நவம்பர் 26) அறிவித்த நிலையில்,  ஒப்பந்தப்படி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது அவர் வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது.

அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை இன்று 4 மணிக்குள் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.

மேலும் ஏலத்திற்கு முன்னதாக வரும் டிசம்பர் 12 ஆம் தேதிவரை டிரேட் முறையிலும் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தங்களது வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது.

தொடரில் விளையாடும் 10 அணிகளும் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் ஐபிஎல் டிரேட் முறை மூலமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், அவரை தங்களது அணியிலேயே தக்க வைத்துக் கொண்டதாக அறிவித்துள்ளது குஜராத் அணி.

இப்படி மும்பை மற்றும் குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா பெயர் மாறி மாறி இடம் பெற்று வருவது அவரது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில், என்ன வேண்டுமானாலும் நடக்கலாலும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் தற்போது கிரிக்பஸ் வெளியிட்டிருக்கும் செய்தி ரசிகர்களை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி ’மீண்டும் ஹர்திக் பாண்டியாவை ரூ.15 கோடிக்கு மும்பை அணி தற்போது வெற்றிகரமாக வாங்கிவிட்டதாகவும்,  பிசிசிஐ -யிடம் இரண்டு அணிகளும் ஒப்புதல் வாங்கிவிட்டதாகவும்’ கிரிக்பஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் ஹர்திக் பாண்டியா அணி மாற்றம் குறித்து இதுவரை இரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

போண்டாவும்… பாண்டியாவும்…. : அப்டேட் குமாரு!

டிஜிட்டல் திண்ணை: எம்.பி. வேட்பாளர் தேர்வு- மாசெக்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அதிர்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share