துபாயில் நேற்று (பிப்ரவரி 23) நடந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.
8 ஓவர்கள் வீசி 31 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். பாகிஸ்தானின் முன்னணி வீரர்கள் பாபர் அசாம் மற்றும் சவுட் ஷகீல் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை ஹர்திக் நேற்று அவுட் செய்தார். அதோடு, ஒரு நாள் போட்டியில் 200 விக்கெட்டுகளையும் நேற்று வீழ்த்தினார். 216 ஒரு நாள் போட்டிகளில் இந்த சாதனையை ஹர்திக் படைத்துள்ளார்.Hardik Pandya Wears Rs 7 Crore Watch
இந்த ஆட்டத்தின் போது, பாண்ட்யா கையில் அணிந்திருந்த வாட்ச்தான் இப்போது சோஷியல் மீடியாவில் பேசு பொருளாகியுள்ளது. நேற்றைய ஆட்டத்தின் போது, ஹர்திக் தனது கையில் Richard Mille RM 27-02 ரக வாட்ச்சை கட்டியிருந்தார்.
இந்த வாட்ச்சின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.6.92 கோடியாகும். டென்னிஸ் லெஜன்ட் ரஃபேல் நடாலுக்காக இந்த ரக வாட்ச் முதன் முதலாக தயாரிக்கப்பட்டது. உலகில் மொத்தமே 50 வாட்ச்கள்தான் தயாரிக்கப்பட்டன. விலையுயர்ந்த வைரங்கள் கொண்டு இந்த வாட்ச்சுகள் உருவாக்கப்படுகின்றன. Hardik Pandya Wears Rs 7 Crore Watch
சுவிட்சர்லாந்திலுள்ள லெஸ் புருலெக்ஸ் நகரில் இந்த வாட்ச் நிறுவனம் அமைந்துள்ளது. ரிச்சர்ட் மில்லி என்பவர்தான் இந்த நிறுவனத்தை 2001 ஆம் ஆண்டு உருவாக்கினார். ஆண்டுக்கு 4 ஆயிரம் முதல் 4,500 கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்படும். 200 ஊழியர்கள்தான் பணிபுரிகின்றனர்.
டி.எம்.கே பைல்சை பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை வெளியிட்டபோது, முதல்வர் ஸ்டாலின் கட்டியிருக்கும் வாட்ச் 1.3 கோடி என்று குற்றம் சாட்டினார். அண்ணாமலை சொன்ன அந்த வாட்ச் நிறுவனம்தான் ரிச்சர்ட் மில்லி.