ஐபிஎல் தொடர் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தற்போது, 43 வயதில் களமிறங்குவதால் பெரும் எதிர்பார்ப்பு அவர் மீது இருக்கிறது. இந்த நிலையில், மும்பை மற்றும் சென்னை அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங், தோனியைச் சந்தித்து பேசினார். harbhajan praising dhoni
தோனியிடம் தான் பேசிய விஷயங்கள் குறித்து ஹர்பஜன் மீடியாக்களிடம் பேசியுள்ளார்.அதில் ஹர்பஜன் கூறியதாவது, ”சமீபத்தில் நண்பரின் மகள் திருமணத்தில் தோனியை பார்த்தேன். நல்ல பிட்னெஸ்ஸாக இருந்தார். இந்த வயதில் என்ன செய்கிறீர்கள், கஷ்டமாக இல்லையா? என்று கேள்வி கேட்டேன்.
”கடினம் தான் இருந்தாலும், இது எனக்கு பிடித்த விஷயம். இதில்தான் மகிழ்ச்சியை உணருகிறேன்” என்று தோனி பதில் சொன்னார். அந்த ஆர்வம் இருக்கும் வரை உங்களால் ஒரு விஷயத்தை முழு ஆர்வத்துடன் செய்யமுடியும். அதைத்தான் இப்போது தோனி செய்து கொண்டிருக்கிறார். harbhajan praising dhoni
பந்துவீச்சாளர்கள் மேல் இப்போதும் தோனி ஆதிக்கம் செலுத்துகிறார். இந்த வயதிலும் பயிற்சிக்கு முதல் ஆளாக களம் வருகிறார். கடைசி ஆளாக மைதானத்தை விட்டு வெளியேறுகிறார். தினமும் 2,3 மணி நேரம் பேட்டிங், பிறகு விக்கெட் கீப்பிங் பயிற்சி இதுவெல்லாம் இருக்கிறது. விக்கெட் கீப்பிங்கிலும் அவர் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக தான் உள்ளார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி வரும் 23 ஆம் தேதி மும்பை அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.