வைப் மோடில் இளைஞர்கள்… வேளச்சேரியில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்!

Published On:

| By Selvam

வாரம் முழுவதும் பரபரப்பாக வேலைக்கு செல்பவர்களுக்கும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் பிரேக் கிடைக்கிறது.

இந்த விடுமுறை நாளை உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் கழிக்க சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் மாநகராட்சியுடன் இணைந்து ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அந்தவகையில், சென்னை வேளச்சேரியில் இன்று (ஆகஸ்ட் 11) காலை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. டிஜே பாடல்களுக்கு அனைவரும் வைப் மோடில் ஆட்டம் போட்டனர். பொய்க்கால் குதிரை ஆட்டம், நாய்கள் கண்காட்சி இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தது. சிறுவர், சிறுமிகள் சிலம்பம் சுற்றி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு உற்சாகமாக ஆட்டம் பாட்டத்துடன் செலிபிரேட் செய்தனர்.

சென்னையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை ஒட்டி, வேளச்சேரி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள வெளியிட்ட அறிக்கையில்,

“J-7 வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேளச்சேரி உள்வட்ட சாலையில் ஞாயிற்றுக்கிழமை தினங்களான “ஆகஸ்ட் 11, 18, 25 ஆகிய தினங்களில் அதிகாலை 2 மணி முதல் காலை 10 மணி வரை Happy Street ” நிகழ்ச்சியினை நடத்த Times of India நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

மேற்படி “Happy Street” நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் அந்தந்த நாட்களில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

  1. ஆலந்தூர் மற்றும் GST சாலையிலிருந்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் Sunshine School அருகில் வலது புறமாகத் திரும்பி எதிர்புறமுள்ள உள்ள வட்டச்சாலை வழியாகச் சென்று கைவேலி சந்திப்பில் “U” திரும்பம் செய்து இரயில்வே மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்.
  2. விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி உள்ள வட்டச் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி இரயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்பில் “U” திருப்பம் செய்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்” என்று தெரிவிக்கப்பட்டது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிரஸ் சரியில்லை… ஷாருக்கான் படத்துக்கு நோ சொன்ன பிரபல பாலிவுட் நடிகை!

“அதானி நிறுவனங்களில் ‘செபி’ தலைவருக்கு பங்குகள்”… மீண்டும் புயலை கிளப்பிய ஹிண்டன்பர்க்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share