காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூன் 19) பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பிறந்தநாள்
நேரு குடும்பத்தில் கடந்த 1970ம் ஆண்டு ஜுன் 19ம் தேதி ராகுல் காந்தி பிறந்தார். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரனாகவும், நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் பேரனாகவும் முதலில் அடையாளம் காணப்பட்டவர் ராகுல் காந்தி.
ஆனால், இன்று தனக்கான ஒரு அடையாளத்தை தானே உருவாக்கி வரும் முயற்சியில் பெரும் வெற்றிகளையும் குவித்து வருகிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று (ஜூன் 19) தனது 54வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
நம் நாட்டு மக்களுக்கான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரத்திற்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தொடர்ந்து முன்னேறவும் வெற்றியடையவும் வாழ்த்துகள்” என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாழ்த்தோடு ராகுல் காந்தியோடு எடுத்துக்கொண்ட புகைப்படம், தமிழகத்தை பற்றி ராகுல் பேசியது, தேர்தல் பிரச்சாரத்தின் போது தனக்காக இனிப்பு வாங்கியது உள்ளிட்ட வீடியோக்களை பகிர்ந்து ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சுதந்திர தினத்தில் தங்கலான்.. வில்லன் போஸ்டரை வெளியிட்ட பா. ரஞ்சித்