தமிழ் திரையுலகில் ஹன்சிகா மோத்வானி தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு பிறகு, தமிழில் முன்னணி நடிகையாகவும் ஹன்சிகா மாறினார். அவருக்கு தற்போது திருமணமும் நடந்து விட்டது. இதற்கிடையே, ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி தொலைக்காட்சி நடிகையான முஸ்கன் நான்சி என்பவரை 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2022 ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
சில காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனியே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகை ஹன்சிகா மோத்வானி குடும்பத்தின் மீது அவரது அண்ணி நான்சி குடும்ப வன்முறை புகார் கொடுத்துள்ளார்.
அதில் முஸ்கன் தனது மாமியார் மற்றும் மைத்துனியான ஹன்ஷிகா ஆகியோர் எனது திருமண பந்தத்தில் தலையிட்டு, எனது கணவருடனான உறவை சீர்குலைக்கின்றனர். எனது கணவர் வீட்டு வன்முறையில் ஈடுபட்டார். இதனால், உடலளவில் மனதளவில் பாதிக்கப்பட்டேன். பணம் மற்றும் சொத்துக்களை கொண்டு வர கூறி கொடுமைப்படுத்தினார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நான்சி இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், முஸ்கன் கூறியிருந்ததாவது, “நான் பெல்ஸ் பால்சி (முகவாதம்) நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். வாழ்க்கை கணிக்க முடியாதது, ஆச்சரியங்கள் நிறைந்தது. சிலர் நான் எங்கேயிருக்கிறேன் என்று தேடினர். சிலர் நான் நடிப்பு துறையை விட்டு வெளியேறி விட்டேன் என்று கருதினர். முக வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த சில மாதங்கள் வீங்கிய முகத்துடனும், தாங்க முடியாத வலியுடனும் வாழ்ந்தேன். இது எனக்கும் என் பெற்றோருக்கும் கடும் மன அழுத்தத்தை தந்தது’ என்று கூறியிருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
திருந்தாத கேரளா : குப்பை கழிவுகளை தமிழகத்துக்கு கொண்டு வந்த ‘நண்பேண்டா’வுடன் தமிழர்கள் கைது!
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்