கை சின்னத்துக்கு 80 சதவிகித வாக்குகள் கிடைக்கும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

Published On:

| By Kavi

திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கில் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கை சின்னத்துக்கு 80 சதவிகித மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஈரோடு கிழக்கில் 80 சதவிகித மக்கள் கை சின்னத்தில் வாக்களிப்பார்கள் என நம்பிக்கை இருக்கிறது.

முதல்வர் முக.ஸ்டாலினின் இந்த 20 மாத ஆட்சியின் அடையாளமாக இந்த வெற்றி அமையும். அதுபோன்று ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவும் அமையும்” என்றார்.

அப்போது வாக்கு மை அழிவதாக அதிமுக அளித்த புகார் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “என் கையில் மை வைத்து 10 நிமிடம் ஆகிறது. இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

மையைப் பற்றி ஏற்கனவே காமராஜர் தோற்றபோது அவரிடம் மை சரியில்லை என்று சொன்னார்கள். அதற்கு அவர், மக்கள் வாக்களித்ததால் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றார்.

அதே வாதம் இப்போதும் தொடரும். எதிர்க்கட்சியால் வெற்றி பெற முடியாது என்று தெரிந்ததால் பொய்யான குற்றச்சாட்டைப் பதிவு செய்து வருகின்றனர்” என்றார்.

பிரியா

ஈரோடு கிழக்கு : வாக்கு மை அழிகிறது – அதிமுக புகார்!

மேகாலயா நாகாலாந்தில் தேர்தல் : பிரதமர் வேண்டுகோள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share