திருநம்பிகள் சிக்கினால், ஹமாஸ் என்ன செய்வார்கள்? இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

Published On:

| By Kumaresan M

லெபனானில் (நேற்று 10) நவம்பர்  பைப்லோஸுக்கு அருகில் உள்ள அல்மாட் (Almat) பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் ஹிஸ்புல்லா ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வான்வழி கண்காணிப்பு மற்றும் துல்லியமான உளவு தகவல்கள் ஆகியவற்றை கொண்டு பொதுமக்களுக்கான ஆபத்தை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, காசாவில் தங்கள் பேச்சை கேட்காத மக்களை ஹமாஸ் அமைப்பினர் கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோ ஒன்றை இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு மட்டுமல்ல காசாவுக்கும் எதிரானவர்கள் என்ற தலைப்பிட்டு அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இளைஞர் ஒருவரை கயிற்றில் கட்டி வைத்து ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்குகிறார்கள்.  குறிப்பாக திருநம்பிகள் கிடைத்து விட்டால் அவர்களை கடுமையாக டார்ச்சர் செய்வதை வாடிக்கையாக ஹமாஸ் அமைப்பினர் வைத்துள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஹமாஸ் இயக்கத்தினரிடத்தில் திருநம்பி ஒருவர் சிக்கியுள்ளார்.  அவரை கட்டி வைத்து சராமரியாக கம்பு கொண்டு அடித்துள்ளனர். உணவு , தண்ணீர் தராமல் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

பின்னர், குரான் மீது கை வைத்து, இனிமேல் திருநம்பியாக நடக்க மாட்டேன் என்று சத்தியம் வாங்கியுள்ளனர். பின்னர், விடுவிக்கப்பட்ட அவர் ஒரு பேட்டியில் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து கூறியிருந்தார் என்பது   குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அமைப்பினர் காசா மக்களை மட்டுமல்லாமல் அரசியல் எதிரிகள், எல்.ஜி.பி.டி.ஓ குழுவினரையும் கொடூரமாக தாக்குவதாகவும் மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 “வானம் இடிந்து விழுந்துவிடாது” : TNUSRB தலைவர் நியமனத்துக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

ஓபிசி மக்களை காங்கிரஸ் பிளவுபடுத்துகிறதா? – மோடியை சாடிய ஜெய்ராம் ரமேஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share