Thalapathy 69 : அரசியல் கதைக்காக ‘அஜித்’ இயக்குநருடன் கூட்டணி வைக்கும் விஜய்?

Published On:

| By Manjula

லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது G.O.A.T (தளபதி 68) படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

சமீபத்தில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியை அறிவித்தார். முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால், தளபதி 69 படம் தான் தன்னுடைய கடைசி படமாக இருக்கும் என்று அறிவித்தார்.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே தளபதி 69 படத்தை யார் இயக்க போகிறார்? என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

முதலில் வெற்றிமாறன் தான் தளபதி 69 படத்தை இயக்குவார் என்று, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவத் தொடங்கியது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து அட்லி, கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் போன்ற பல இயக்குநர்களின் பெயர்கள் கூறப்பட்டது.

ADVERTISEMENT

Crew: தபு, கரீனா, க்ரிதி சனோனின் நடிப்பு ஈர்க்கிறதா? – திரை விமர்சனம்!

இந்நிலையில், தற்போது விஜய்யின் 69-வது படம் குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஹெச்.வினோத் தான் விஜயின் கடைசி படத்தை இயக்குகிறார் என்பது தான் அது.

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ஹெச்.வினோத்.

அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

அதன் பிறகு நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய மூன்று படங்களில் தொடர்ந்து பணியாற்றிய வினோத் அடுத்ததாக, கமல்ஹாசனின் 233-வது படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த படம் தள்ளிப்போக, யோகி பாபுவை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து, சிறிய பட்ஜெட்டில் ஒரு புதிய படத்தை வினோத் இயக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது நடிகர் விஜய்யின் தளபதி 69 திரைப்படத்தை இயக்கப்போவது வினோத் தான் என, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

விஜய் – ஹெச். வினோத் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தளபதி 69 திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான DVV என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

G.O.A.T பணம் குறித்த அப்டேட் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கருதப்படும் நிலையில், அடுத்து தளபதி 69 அப்டேட்டும் ஏப்ரல் மாதமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-கார்த்திக் ராஜா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேர்தலில் மோடி ‘மேட்ச் பிக்சிங்’ செய்துவிட்டார் : ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

Rain Update: கொளுத்தும் ‘கோடை’ வெயிலுக்கு இதமாக… ‘ஜில்லுன்னு’ அப்டேட் கொடுத்த வானிலை மையம்!

கலைஞர் நினைவிடத்திற்கு சீல் வைக்க வேண்டும் : அதிமுக கோரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share