ADVERTISEMENT

மோடியே திராவிடர் தான்… அடித்துச் சொல்லும் ஹெச்.ராஜா

Published On:

| By Selvam

பிரதமர் மோடியே திராவிடர் தான் என்று பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா இன்று (அக்டோபர் 19) தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் தூர்தர்ஷன் அலுவலகத்தில் நேற்று (அக்டோபர் 18) இந்தி மாத நிறைவு விழா நடைபெற்றது. ஆளுநர் ரவி கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியபோது, ‘திராவிடநல் திருநாடு’ என்ற வரியை விடுத்துவிட்டுப் பாடியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘ஆளுநரா ஆரியரா’ என்று கடுமையான விமர்சனத்தை ஆளுநர் ரவி மீது முன்வைத்தார். பதிலுக்கு ஆளுநர் ரவி, என் மீது இனவான கருத்தை தெரிவித்து தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை செய்ததாக ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜாவிடம் ஆளுநர் ரவி – ஸ்டாலின் மோதல் போக்கு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஹெச்.ராஜா, “திராவிடம் என்பது இடத்தைக் குறிக்கும், இனத்தை அல்ல. தரு என்றால் சமஸ்கிருதத்தில் மதம் என்று அர்த்தம். காடுகள் நிறைந்த பகுதி. தக்கான பூமிக்கு தெற்கே இருக்கின்ற காடுகள் நிறைந்த பகுதி  56 தேசங்களாக இருந்தது.

ADVERTISEMENT

அதில் முதல் மாநிலம் குஜராத். அதனால் இந்த நாட்டின் பிரதமரே திராவிடர் தான். இதை நான் பலமுறை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

செல்வம்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றேனா? – தமிழிசைக்கு உதயநிதி பதில்!

என் மகனே மீண்டும் பிறந்திருக்கிறான் – தர்ஷனால் கொல்லப்பட்ட ரேணுகாசாமி தந்தை உருக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share