“அமலாக்கத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை” – ஹெச்.ராஜா

Published On:

| By Selvam

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜக திருச்சி மாவட்ட வண்ணாரப்பேட்டை அலுவலகத்தில் ஹெச்.ராஜா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

ADVERTISEMENT

அப்போது பேசிய அவர், “மேகதாது அணை கட்டுவோம் என்று கூறிய காங்கிரஸ் கட்சியை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. கர்நாடகா அரசை மேகதாது அணை கட்ட விடமாட்டோம் என்ற முடிவில் பாஜக உறுதியாக உள்ளது. காவிரியில் தண்ணீர் வராததற்கு திமுக தான் காரணம்.

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி மீது பாஜக வழக்கு தொடரவில்லை. ஏற்கனவே உள்ள வழக்குகளின் அடிப்படையில் தான் அவரகளது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. தவறு செய்தால் தண்டிக்கப்படுவார்கள். அமலாக்கத்துறையின் ஆடி ஸ்பெஷல் ஆஃபர் பொன்முடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. அமலாக்கத்துறைக்கு வந்துள்ள தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுகிறது. அடுத்து அனிதா ராதாகிருஷ்ணனின் பெயரும் அடிபடுகிறது” என்று தெரிவித்தார்.

முதல்வர் பேசியது நகைச்சுவையாக இருக்கிறது: நயினார் நாகேந்திரன்

ADVERTISEMENT

“எதிர்க்கட்சிகளை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார்” – கார்கே

 

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share