விஷ்ணு விஷால் மீண்டும் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்ற நிலையில் வசூல் ரீதியாகவும் தயாரிப்பு தரப்புக்கு லாபகரமாக அமைந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்த அந்தப் படம் மகளிர் கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியிருந்தது. தற்போது அந்தப் படம் தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது. அங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
அதைப் போல் ஆண்கள் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு தெலுங்கில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி ஹிட் அடித்துள்ளது ஜெர்ஸி திரைப்படம். நானி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்து நடித்த அந்தப் படத்தை கௌதம் தின்னாரி இயக்கியிருந்தார். சத்யராஜ், ஹரிஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். படம் பற்றி எழுந்த நேர்மறையான விமர்சனம் படத்தை பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடிக்கவைத்தது.
அந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ராணா டகுபதி பெற்றுள்ளதோடு தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். நானி நடித்த கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளார். அடிப்படையில் கிரிக்கெட் வீரரான இவர் ஏற்கெனவே சுசீந்திரன் இயக்கத்தில் ஜீவா படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்திருந்தார்.
நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் கிரிக்கெட்டில் இணைந்து சாதனை படைப்பதை மையமாகக் கொண்டு ஜெர்ஸி படம் உருவாகியிருந்தது. படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
**
மேலும் படிக்க
**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**
**[ வைகோ எம்.பி.யாக சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/07/17/51)**
,”





