ADVERTISEMENT

போலீஸ் மீது தாக்குதல் : தந்தை மகன் கைது!

Published On:

| By Balaji

ஆம்பூரில் தலைமைக் காவலரை தாக்கிய தந்தை மற்றும் மகனை போலீஸார் நேற்று (ஏப்ரல்-16) கைது செய்தனர்.

ஆம்பூர் நியூ பெத்லஹேமை சேர்ந்த வி.வாசுதேவன்(55) மற்றும் அவரது மகன் வினோத்(28) ஆகிய இருவரும் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து கட்டுப்பாட்டு பணியில் இருந்த தலைமைக் காவலர் என்.சங்கரை தாக்கியுள்ளனர்.

ADVERTISEMENT

புகாரின் பேரில் அவர்கள் மீது ஆம்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆம்பூர் காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.செல்வராஜ், ‘நேற்று காலை 10.15 மணிக்கு, இருசக்கரவாகனத்தில் வினோத் அவரது தந்தையுடன் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தவறான திசையில் சென்றுக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

அதே சமயம், அவர்கள் எதிரே திருப்பத்தூரில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து அங்கேயே நின்றது. பேருந்து மோதவிருந்ததாக கூறி வினோத் மற்றும் அவரது தந்தை பேருந்து குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, போக்குவரத்தை சரிசெய்ய காவலர் சங்கர் அங்கு சென்றுள்ளார். பஸ் குழுவினரை தாக்க முயன்ற வினோத் மற்றும் அவரது தந்தையையும் தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர், தவறான திசையில் வந்ததற்காக அவர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் காவலர் சங்கரை தாக்கியுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் விசாரணைக்கு தந்தை மற்றும் மகனை அழைத்து சென்றனர். சிகிச்சைக்காக தலைமை காவலர் ஆம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என அவர் தெரிவித்துள்ளார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share