ADVERTISEMENT

ஜாலியன்வாலா பாக் படுகொலை – மோடி அஞ்சலி

Published On:

| By Balaji

அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் என்ற பூங்காவில் 1919-ம் ஆண்டு, இதே ஏப்ரல் 13-ம் தேதி ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் பிரிட்டிஷ் ராணுவம், பீரங்கி மற்றும் துப்பாக்கிகளைக் கொண்டு, பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தைக் குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தின் பேச்சைக் கேட்கவும், பூங்காவில் நேரம் செலவிடவும் வந்திருந்த அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்தியதில், 379 பேர் கொல்லப்பட்டதாகப் பிரிட்டிஷ் அரசு கூறியிருந்தாலும், இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை ஒட்டியது என்று கூறுப்படுகிறது.

இந்த ஜாலியன்வாலா பாக் படுகொலையை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜாலியன்வாலா பாக் படுகொலையில் உயிர்நீத்த தியாகிகளின் தியாகத்தையும் வீரத்தையும் ஒருபோதும் மறக்கமுடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share