தரமான சாலைகள் வேண்டுமானால் சுங்க கட்டணத்தை அவசியம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அரசாங்கத்தில் போதுமான நிதி இல்லை என்பதால் சுங்கக் கட்டண முறை இருக்கும் என தெளிவுபடுத்தியுள்ளார்.
மக்களவையில் இன்று (ஜூலை 16) சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மீதான மானிய கோரிக்கைகள் குறித்த கலந்துரையாடலுக்கு பதிலளித்த நிதின் கட்கரி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 40,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு மத்திய அரசு நெடுஞ்சாலையை அமைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, “சுங்கச் சாவடிகளில் அதிகளவு பணம் வசூலிக்கப்படுவதாக சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். சுங்கச் சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் பணமானது, கிராமப்புற மற்றும் மலைப் பகுதிகளில் சாலை அமைக்கப் பயன்படுத்தப்படுகிறது. சுங்கக் கட்டண விகிதங்கள் அவ்வப்போது மாறுபடும். ஆனால் அவற்றை நிறுத்த முடியாது. உங்களுக்கு தரமான சாலைகள் வேண்டுமானால், அதற்கு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும். அரசாங்கத்திடம் பணம் இல்லை, என்பதால் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்தமுடியாது. சாலை கட்டமைப்பு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதில் கடுமையான பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இப்பிரச்சினைகளை தீர்க்க மாநில அரசுகள் உதவ முன்வர வேண்டும். 2014 முதல் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், 3.85 லட்சம் கோடி மதிப்புள்ள 400 க்கும் மேற்பட்ட திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 403 திட்டங்கள் கிடப்பில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சுங்கச் சாவடிகளை அகற்றுவதற்கு திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 12ஆம் தேதி வலியுறுத்தியிருந்த நிலையில், மக்களவையில் கட்கரி இவ்வாறு பேசியுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[என் மகனாகப் பார்க்காதீர்கள்… ‘திமுக’காரனாகப் பாருங்கள்!](https://minnambalam.com/k/2019/07/16/27)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
,”




