ஐந்து வருடங்களுக்குப் பின் ஏஞ்சலினா ஜோலி நடிக்கும் மலேபிசென்ட்: மிஸ்ட்ரஸ் ஆஃப் ஈவிள் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
2014ஆம் ஆண்டு வெளியான மலேபிசென்ட், ஒரு டார்க் ஃபேன்டஸி திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை ரோபர்ட் ஸ்ட்ரோம்பெர்க் இயக்க வால்ட் டிஸ்னி ஸ்டூடியோவின் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஏஞ்சலினா ஜோலி, ஷர்லடோ கோப்லே, எல்லே பான்னிங், சாம் ரிலே, இமெல்டா ஸ்டாண்டன், ஜூனோ மற்றும் லெஸ்லி மேன்வில்லி நடித்திருந்தனர்.
மாயாஜால சக்தி நிரம்பிய ஒரு துர்தேவதையின் சாபத்தால் தன் 16ஆவது பிறந்தநாளில் உயிர் பிரியும் சாபம் பெறுகிறாள் இளவரசி. உண்மையான காதலால் மட்டுமே அவளை மீட்க முடியும் என அவளுக்கு விதிக்கப்பட்டிருக்க, அடுத்து என்ன ஆகும் என்பதே இதன் கதை. ஸ்லீப்பிங் பியூட்டி எனும் சிறுவர்களுக்கான கற்பனைக் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமிது.
இதன் முதல் பாகம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரிக் குவித்தது. துர்தேவதையாக இதில் நடிக்கிறார் ஏஞ்சலினா ஜோலி. இவர் நடித்ததிலேயே அதிக வசூலை வாரிக் குவித்த படம் இதுவே. மேலும் இந்தப் படம் 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அதன் இரண்டாம் பாகமாக உருவான மலேபிசென்ட்: மிஸ்ட்ரஸ் ஆஃப் ஈவிள் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் கதையை ஒற்றியே இப்பாகம் தயாராகியுள்ளதால் அதன் வீரியம் சற்றும் குறையாமல் வந்திருக்கிறது. மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏஞ்சலினாவை திரையில் பார்ப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இப்பாகத்தில் திருமணம் செய்யும் வயதை அடைந்த இளவரசியின் திருமணத்தைத் தடுக்க ஏஞ்சலினா முயற்சி செய்ய, அதனால் சூழும் போரால் நாடே போர் களமாகிறது. சண்டைக் காட்சிகளும், மாயாஜாலங்கள் நிரம்பிய குழந்தைகளை ஈர்க்கும் காட்சிகளும் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது. நன்மைக்கும் தீமைக்குமான போரில் யார் வெல்வார், இளவரசி பிழைப்பாரா, ஏஞ்சலினாவின் பழி உணர்ச்சி மாறுமா போன்ற கேள்விகளுக்கு அக்டோபர் 18ஆம் தேதி விடையளிக்கக் காத்திருக்கிறது இரண்டாம் பாகமான மலேபிசென்ட்: மிஸ்ட்ரஸ் ஆஃப் ஈவிள்.
[மலேபிசென்ட்: மிஸ்ட்ரஸ் ஆஃப் ஈவிள் ட்ரெய்லர்](https://www.youtube.com/watch?v=n0OFH4xpPr4)
**
மேலும் படிக்க
**
**[இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!](https://minnambalam.com/k/2019/07/09/22)**
**[டிஜிட்டல் திண்ணை: மாமா… மாப்ள… திமுக-அதிமுக கலகல!](https://minnambalam.com/k/2019/07/09/84)**
**[புறநானூறுக்கு பதில் திருக்குறள்: மக்களவையில் ஆ.ராசா](https://minnambalam.com/k/2019/07/09/79)**
**[ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!](https://minnambalam.com/k/2019/07/09/14)**
**[10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு – 16, ஆதரவு – 5](https://minnambalam.com/k/2019/07/09/24)**
,”