எல்லா விஞ்ஞானிகளும் இங்கதான் இருக்காங்க… சிங்கிள் சீட் ட்ரோன் ரெடி!

Published On:

| By Kumaresan M

மத்தியபிரதேசத்தில் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் சிங்கிள் சீட் ட்ரோன் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

இந்த நவீன காலத்தில் ட்ரோன்கள் மிக அவசியமாக கருதப்படுகிறது. சாதாரண புகைப்படங்கள் எடுப்பதில் இருந்து, மருந்துகளை கொண்டு சேர்ப்பது வரை ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவர் வித்தியாசமாக யோசித்துள்ளான். அதன் பயனாக மனிதர்கள் பயணிக்கும் ட்ரோன் உருவாகியுள்ளது.

குவாலியரை சேர்ந்த சிறுவன் மெத்னாஷ் திரிவேதி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறான். அறிவியல் கண்டுபிடிப்புகளில் இந்த மாணவன் மிகுந்த ஆர்வம் கொண்டவன். இதனால், ட்ரோன்களை ஆராய்ந்து வந்தான். கடந்த 3 மாதங்களாக ஆராய்ந்து மனிதர்கள் பயணிக்கும் வகையில் ட்ரோன் ஒன்றை உருவாக்கியுள்ளான்.

சுமார், 80 கிலோ வரை உள்ள மனிதர்கள் இந்த ட்ரோனில் பயணிக்க முடியும். குவாலியரிலுள்ள மைதானத்தில் தனது ட்ரோனில் பயணித்து அனைவரையும் வியக்க வைத்தான். கிட்டத்தட்ட 6 நிமிடங்கள் இந்த ட்ரோனை சிறுவன் இயக்கி காட்டினான்.

மெத்னாஷ் திரிவேதி ட்ரோனை இயக்கிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மகிந்த்ரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்த்ரா, “இது கண்டுபிடிப்பு மட்டுல்ல. இன்ஜீனியரிங்கை எப்படி பயன்படுத்த வேண்டுமென்பதையும் அர்ப்பணிப்புணர்வையும் பற்றியது. இது போன்ற சிறார்களால் நாடு நிறைவடையும்” என்று கருத்து கூறியுள்ளார்.

ஆனந்த் மகிந்த்ரா பதிவில் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர். அதில் ஒருவர், உங்களை போன்றவர்களால்தான், மெத்னாஷ் போன்றவர்கள் ஊக்கமடைகின்றனர் என்று கூறியுள்ளார். இவர்களை போன்றவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் துரதிருஷ்டவசமாக பலரிடத்தில் அந்த குணம் இல்லை என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக கூட்டணி வசமாகும் – ஸ்டாலின் நம்பிக்கை!

இந்தியாவே வேண்டாம், லண்டன் புறப்படும் விராட் கோலி குடும்பம்… அப்படி என்ன பந்தம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share