சூர்யா 43 அப்டேட்: ஜிவி பிரகாஷ் கொடுத்த குறியீடு!

Published On:

| By Monisha

gv prakash hint about surya 43

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் கங்குவா. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா அதிக  பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

ஓர் வரலாற்று பின்னணியை மையமாக கொண்டு உருவாகும் கங்குவா படத்தில் நடிகர் சூர்யா இரு வேடங்களில் நடித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த படத்தின் போஸ்டர்கள், க்ளிம்ஸ் வீடியோ என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

7ஆம் அறிவு படத்திற்கு பிறகு மீண்டும் ஓர் வரலாற்று பின்னணி கதைக்களத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளதால் கங்குவா படத்திற்கு ரசிகர்கள் இடையே அதிக எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

ஹீரோவாக மட்டுமின்றி 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் பல நல்ல படங்களை தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து தயாரித்தும் வருகிறார் நடிகர் சூர்யா.

இந்நிலையில் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் ஓர் புதிய படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது என்பதை  குறிப்பிடும் வகையில் “43 Hours to go” என்று நேற்று (அக்டோபர் 24) இரவு 9 மணிக்கு பதிவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த பதிவை கண்ட ரசிகர்கள் நடிகர் சூர்யா – இயக்குனர் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாக உள்ள சூர்யா 43 படம் குறித்த அப்டேட் தான் வெளியாக போகிறது என்று எக்ஸ் தளத்தில் கருத்துகளை பகிர தொடங்கிவிட்டனர்.

இதனை மேலும் உறுதி செய்யும் வகையில் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் எக்ஸ் பதிவிற்கு 9 மணி நேரத்திற்கு முன்பே,

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் “GV100 anytime soon” என்று பகிர்ந்துள்ள பதிவை ரசிகர்கள் குறிப்பிட்டு காட்டுகின்றனர்.

ஏனென்றால் சூர்யா 43 படம் தான் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க போகும் 100 வது படம் என்ற தகவலும் சில நாட்களுக்கு முன் வெளியானது.

மேலும் ’43 Hours to go’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதால் நிச்சயம் சூர்யா 43 படம் குறித்த அப்டேட் தான் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.

ஏற்கனவே சூர்யா – சுதா கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் சூப்பர் ஹிட்டானதால் இந்த புது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அதிகரித்துவிட்டது.

மேலும் சுதா – சூர்யா கூட்டணியில் உருவாக போகும் சூர்யா 43 படத்தில் நடிகர் சூர்யா கல்லூரி மாணவராக நடிக்க உள்ளார் என்றும் நடிகர் துல்கர் சல்மான், நடிகை நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

ஜப்பான் ரிலீஸ் தேதி இதுவா?

ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு: ரவுடி கொடுத்த வாக்குமூலம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share