கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வழக்கு : குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் – போக்ஸோ நீதிமன்றம் அதிரடி

Published On:

| By Pandeeswari Gurusamy

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வட மாநில இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கி உளளது.

ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை12ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற 4ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியை பின் தொடர்ந்த வட மாநில இளைஞர் ராஜு பிஸ்வகர்மா சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் அங்கிருந்து தலைமறைவாகினார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இதுகுறித்து திருவள்ளூர் காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து குற்றவாளி ராஜு பிஸ்வகர்மாவை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்டவரின் புகைப்படத்தை சிறுமியிடம் காட்டி குற்றவாளியை காவல்துறையினர் உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 5 மாதங்களாக திருவள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் இன்று (டிசம்பர் 24) திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ADVERTISEMENT

தீர்ப்பில் பிஸ்வகர்மா குற்றவாளி என்றும் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிக்கு 1.45லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் நாள் நான்காம் வகுப்பு பயிலும் 8 வயது மாணவி கொடிய முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளி ராஜு பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ. 2 லட்சம் தண்டமும் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. குற்றவாளி தண்டிக்கப்படுவதற்கு பங்களித்த அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

ஜூலை மாதம் 12-ஆம் நாள் சனிக்கிழமை அரை நாளுடன் பள்ளிக்கூடம் முடிவடைந்த நிலையில், பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுமியை கொடூரன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான செய்தியை கேட்ட போதே துடித்துப் போனேன். சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு இப்போது நீதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் நினைவுக்கு வருகின்றன.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் காவல்துறையினர் இழுத்தடித்து வந்தனர். காவல்துறைக்கு எதிராக பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட பிறகு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல், குற்றவாளியான பிஸ்வகர்மாவும் நீண்ட தாமதத்திற்கு பிறகு தான் கைது செய்யப்பட்டார். போதிய அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்காவிட்டால், இந்தக் கொடுமைக்கு நீதி கிடைக்காமலேயே போயிருக்கும். குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மேல்முறையீடுகளிலும் அது உறுதி செய்யப்படுவதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.

பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடுவதை ஆட்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தண்டிக்கப்பட்டிருக்கும் குற்றவாளி அசாமிலிருந்து ஆந்திரா சென்று அங்குள்ள தொடர்வண்டி நிலையத்தில் உள்ள கடையில் பணி செய்து வந்திருக்கிறார். வார இறுதி நாள்களில் தமிழ்நாட்டுக்கு வந்து கஞ்சா புகைப்பதையும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பது தான் இத்தகைய குற்றச்செயல்கள் பெருகுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய குற்றங்களைத் தடுக்க தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை அடியோடு ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share