கிச்சன் கீர்த்தனா: டோக்ளா

Published On:

| By Selvam

Dhokla Recipe in Tamil

குஜராத்திகளின் விருப்பமான உணவான டோக்ளா, தற்போது பல மாநிலங்களிலும் கிடைக்கிறது. சைவ உணவான இது காலை உணவாகவோ சிற்றுண்டியாகவோ உட்கொள்ளப்படுகிறது. பொதுவாக ஹோட்டல்களில் கிடைக்கும் டோக்ளாவை, வீட்டிலேயே செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

ADVERTISEMENT

கடலை மாவு – ஒரு கப்
ரவை – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
இஞ்சி – பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
சர்க்கரை – 3 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
ஃப்ரூட் சால்ட் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க…

ADVERTISEMENT

எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு, வெள்ளை எள் – தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
அலங்கரிக்க…
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – சிறிதளவு

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

சர்க்கரையுடன் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். கடலை மாவு, ரவை, மஞ்சள்தூள், இஞ்சி – பச்சை மிளகாய் விழுது, உப்பு, எலுமிச்சைச் சாறு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். ஒரு தட்டில் எண்ணெய் தடவவும். கரைத்த மாவுடன் ஃப்ரூட் சால்ட் சேர்த்துக் கலந்து தட்டில் ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும் (ஃப்ரூட் சால்ட் கலந்த உடனே மாவை வேகவிட வேண்டும்). பிறகு, சதுர வடிவில் துண்டுகளாக்கவும். இதுதான் டோக்ளா. தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளித்து, டோக்ளா மீது ஊற்றவும். அதன் மேலே சர்க்கரைக் கரைசல், கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இதுக்கு விலை ரூ.525: பணக்கார கிரிக்கெட் வீரர் இப்படி செய்யலாமா? – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

விடாமுயற்சி அலப்பறைகள்: அப்டேட் குமாரு

சானியா மிர்ஸா 2வது திருமணம்? மாப்பிள்ளை யார்?

சிறைக் கைதிகளை மகிழ வைத்த மெளன ராகம்!

தை மாத நட்சத்திர பலன்கள்: ரேவதி

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? – வானிலை மையம் வார்னிங்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share