புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வரும் மே 13-ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி லாவண்டர் (நீல இளஞ்சிவப்பு நிறம்) ஜெர்ஸி அணிந்து ஆட உள்ளனர்.
நடப்பு ஐபிஎல் சீசன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 11 போட்டிகளில் ஆடியுள்ள குஜராத் அணி, 4-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்தநிலையில், குஜராத் ஆணி ஆடும் அடுத்த போட்டியானது மே 13-ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோத உள்ளது.
இந்த போட்டியின் போது புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நீல இளஞ்சிவப்பு நிற ஜெர்ஸி அணிந்து குஜராத் அணி வீரர்கள் ஆட உள்ளனர்.
இதுகுறித்து குஜராத் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புற்றுநோய்க்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வரும் குஜராத் அணி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நீல இளஞ்சிவப்பு நிற ஜெர்ஸி அணிந்து ஆட உள்ளது.
மே 13-ஆம் தேதி குஜராத்தில் நடைபெறும் போட்டியின் போது புற்றுநோய்க்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள்.
இது புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல், அதற்கான சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட முக்கியத்துவத்தை நினைவூட்டும் விதமாக அமையும்” என்று தெரிவித்துள்ளது.
கேப்டன் சுப்மன் கில், “விளையாட்டு வீரர்களான நாங்கள், எங்களின் சமூக பொறுப்பை அறிவோம். நீல இளஞ்சிவப்பு நிற ஜெர்ஸியை அணிந்து ஆடுவது புற்றுநோய் போராளிகளுடன் நம்மை ஒன்றிணைக்கிறது மற்றும் நோய்க்கு எதிரான அவர்களது தைரியத்தை மதிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உலகக்கோப்பை பதக்கத்திற்கு தகுதியானவர் யார்? : யுவராஜின் ’டக்கர்’ பதில்!
6 மாவட்டங்களில் இன்று கனமழை : வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்!