குஜராத் மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு பயணி மட்டும் உயிர் தப்பி இருப்பதாக அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் தெரிவித்துள்ளார். Gujarat Police found one survivor in Air India plane crash
இது தொடர்பாக ANI ஊடகத்துக்கு ஜிஎஸ் மாலிக் தொலைபேசி மூலம் அளித்த பேட்டி: அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் சீட் எண் 11A-ல் பயணித்த ரமேஷ் விஷ்வாஸ் குமார் என்ற பயணி உயிருடன் இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்த பயணி உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விமான விபத்தில் மொத்தம் எத்தனை பேர் உயிரிழந்தனர் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க இயலாது. இவ்வாறு ஜிஎஸ் மாலிக் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிர் தப்பிய விஷ்வாஸ் குமார், பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் எனவும் தெரியவந்துள்ளது.