ரிலாக்ஸ் டைம்: குஜராத் ஹோலி லட்டு!

Published On:

| By Balaji

வடநாட்டில் ஹோலி பண்டிகைக்காகச் செய்யப்படும் இந்த லட்டும் பலருக்கும் பிடித்தமானது. எளிமையாகச் செய்யக்கூடிய இந்த லட்டை நாமும் ரிலாக்ஸ் டைமில் சுவைக்கலாம். உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.

**எப்படிச் செய்வது?**

ADVERTISEMENT

கடாயில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு உடைத்த கால் கப் முந்திரியை வறுத்தெடுத்து வைக்கவும். அதே கடாயில் அரை கப் நெய் ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இரண்டு கப் கடலை மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கைவிடாமல் கறுகாமல் வறுக்கவும். இதில் வறுத்த முந்திரி, கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். பிறகு ஒரு சிட்டிகை உப்பு போட்டுக் கலந்து சிறிது ஆறியதும் பொடித்த ஒன்றரை கப் சர்க்கரைத்தூள் சேர்த்து லட்டு பிடிக்கவும். மேலே முந்திரி, திராட்சையால் அலங்கரித்துப் பரிமாறவும். மாவு சிறிது சூடாக இருந்தால்தான் லட்டு பிடிக்க வரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share